சிங்கப்பூர் வரலாற்றில் மிகப்பெரிய பரிசுத் தொகை… “S$16 மில்லியன் ஜாக்பாட்” – Hong Bao டிரா!

hongbao-draw
Singapore Pools website

மிக பெரிய மல்டி மில்லியனர் ஆவதற்கான மிக மிக எளிய வாய்ப்பு இதோ காத்திருக்கிறது.

Singapore Pool நடத்தும் வருடாந்திர Hong Bao டிராவில் நேற்று பிப்ரவரி 7ம் தேதி யாரும் வெற்றி பெறாததால், அதன் வெற்றி பரிசு S$16 மில்லியனாக உயர்ந்துள்ளது.

“ஊழியர்கள் நேசிக்கப்பட வேண்டியவர்கள்” – சாதாரண குடும்பத்தை சேர்ந்த வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முதலாளி

2014ஆம் ஆண்டிலிருந்து Singapore Pool வெற்றி பட்டியலின்படி, இந்த S$16 மில்லியன் ஜாக்பாட் பரிசுத்தொகை சிங்கப்பூரின் வரலாற்றில் மிகப்பெரிய பரிசாக இருக்கும்.

இந்த டிரா வரும் பிப். 11ஆம் தேதி இரவு 9:30 மணிக்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Hong Bao டிராவை முன்னிட்டு, Singapore Pool அதன் கிளைகள் இயங்கும் நேரத்தை நீட்டிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Singapore Pool பிரதான கிளை வரும் பிப்ரவரி 11 அன்று காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்கப்படும்.

பெண்ணை காணவில்லை – உதவுங்கள் என போலீஸ் வேண்டுகோள்