திருச்சி விமான நிலையத்தின் முக்கிய அறிவிப்பு – ஜன. 9 முதல் நடைமுறை!

Singapore Trichy flight

நிர்வாக காரணங்களுக்காக, திருச்சி விமான நிலைய சரக்கு பிரிவு நாளை ஜனவரி 9ம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்பட உள்ளது.

ஆகையால், விமான நிலையத்திற்கு சரக்குகளை கொண்டு வர வேண்டாம் என்று அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மூன்று இந்தியர்களுக்கு சிறை தண்டனை

ஆகவே, இதன் காரணமாக அனைத்து விமான நிறுவனங்களும், பயண முகவர்களும் திருச்சி சர்வதேச விமான சரக்கு முனையம் மூலம் ஏற்றுமதி செய்ய எந்த விதமான சரக்குகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இந்த சரக்கு பிரிவு மீண்டும் எப்போது இயங்கும் என்றும், சரக்குகளை கையாள்வது குறித்த மறு அறிவிப்பு பின்னர் ஒரு தேதியில் அறிவிக்கப்படும் என்றும் திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குனர் எஸ். தர்மராஜ் அறிவித்துள்ளார்.

சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்களுக்கு நற்செய்தி: “திருப்பதி – சிங்கப்பூர்” இடையே இனி பறக்கலாம்!