உடனடியாக உங்கள் WhatsApp செயலியை புதுப்பியுங்கள் – சிங்கப்பூர் அவரச அறிவிப்பு

whatsapp-vulnerability
Unsplash

சிங்கப்பூரில் உடனடியாக WhatsApp செயலியை புதுப்பிக்கும்படி SingCert – சிங்கப்பூர்க் கணினி அவசரகால நடவடிக்கை குழு ஆலோசனை கூறியுள்ளது.

WhatsApp செயலியைப் புதிப்பிக்காமலே இருக்கும் பட்சத்தில் செயலியை தாக்குதல்காரர்கள் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் எனவும் அது எச்சரித்துள்ளது.

புதுப்பிப்பதன் மூலம் WhatsApp தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என இன்று அது வெளியிடப்பட்ட ஆலோசனையில் SingCert கூறியுள்ளது.

சிங்கப்பூரில் இந்தியரை 9 நாட்களாக காணவில்லை – தகவல் தேடும் போலீஸ்

WhatsApp செயலியின் சமீபத்திய பதிப்புகளை வாட்ஸ்அப் பயனர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் அது கூறியுள்ளது.

முதல் பாதிப்பு செயலின் பின்வரும் பதிப்புகளைப் பாதிக்கிறது:
  • பதிப்பு v2.22.16.12க்கு முன் iOS மற்றும் Android க்கான WhatsApp
  • பதிப்பு v2.22.16.1க்கு முன் iOS மற்றும் Androidக்கான WhatsApp Business
இரண்டாவது பாதிப்பு செயலியின் பின்வரும் பதிப்புகளைப் பாதிக்கிறது:
  • பதிப்பு v2.22.16.2 க்கு முன் Android க்கான WhatsApp
  • iOS க்கான WhatsApp v2.22.15.9

சிராங்கூன் நார்த் பகுதியில் ஓடும் வாகனம் முன்பு வேண்டுமென்றே விழுந்த ஊழியர் (வீடியோ): கார் மோதியது போன்று மகா நடிப்பு