20 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் தனிப்பட்ட கடன் உயர்வு!

Photo: Getty

 

இன்றையச் சூழல் கொரோனா என்ற கொடிய வைரஸ் உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் சங்கிலியை உடைக்க வேண்டும் என்றாலோ, பரவலைத் தடுக்க வேண்டும் என்றாலோ நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் பொதுமுடக்கம் மட்டுமே. இந்த பொதுமுடக்கம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு நமக்கு கை கொடுத்தது. இருப்பினும், மற்றொருபுறம் பொருளாதாரத்தை சின்னாபின்னமாகியது என்றால் மிகையாகாது.

இந்த பொதுமுடக்கம் காரணமாக, பொருளாதார ரீதியிலான பல்வேறு தொழிற்சாலைகளும், வர்த்தக நிறுவனங்களும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தனர். இதில் சில தொழிற்சாலைகள் பண ரீதியிலாக பல்வேறு சிக்கல்களை சந்தித்ததால் தொழிற்சாலைகளை மூடினர். இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழந்தனர். மேலும், அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் தவித்தனர்.

“சட்டம் மட்டும் இருந்தால் போதாது”- அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் பேச்சு…

இதன் காரணமாக, நாட்டின் பொருளாதாரமும் சரிய தொடங்கியது. இந்த நிலையில், சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பன்னாட்டு தொழில் நிறுவனங்களை தங்கள் நாடுகளில் தொழிற்சாலைகளை அமைத்து, தங்கள் நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளைச் சந்தித்து வலியுறுத்தி வருகின்றன.

சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக, முன்னணியில் உள்ள தொழில் நிறுவனங்கள் சிங்கப்பூரில் ஆலைகளை நிறுவி சிங்கப்பூரைச் சேர்ந்தவர்களைப் பணியமர்த்தத் தொடங்கியுள்ளனர்.

உட்லாண்ட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து… பூனைகளைப் பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

இதனிடையே, சிங்கப்பூரில் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக, வங்கிகளில் தனிநபர் கடன் வாங்குவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது சற்று கவலையைத் தருகிறது. குறிப்பாக, 20 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் வாங்கியுள்ள தனிப்பட்ட கடன் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது, இரண்டாவது காலாண்டில் 19% அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் கடன் இலாகா கூறியுள்ளது.

கடன்பற்று அட்டையில் கடன் வாங்குவது குறைந்துள்ளபோதும், தனிப்பட்ட கடன் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் அதிகரித்துள்ளது. 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் இடையே கடந்த ஆண்டில் இருந்து தனிப்பட்ட கடன் தொகை வெகுவாக அதிகரித்துள்ளது.