அஜித், தனுஷை வைத்துப் படம் இயக்குவீர்களா..? என்ற கேள்விக்கு இயக்குனர் அட்லீ பதில்..!!

விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் பிகில், இந்தப் படத்தின் புரமோஷனுக்காக ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார் அட்லீ.

அவற்றில் சில கேள்வி – பதில்கள் இங்கே;

கேள்வி: தனுஷ் கூட ஒரு படம் பண்ணுவீங்களா?

அட்லீ: தனுஷ் சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். கண்டிப்பாகப் பண்ணுவோம்.

கேள்வி: அஜித்தைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்க…

அட்லீ: அஜித் சார் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. என்னுடைய சமீபத்திய விருப்பங்கள் ‘விஸ்வாசம்’ மற்றும் ‘நேர்கொண்ட பார்வை’.

கேள்வி: உங்களுக்குப் பிடித்த விஜய் டயலாக்?

அட்லீ: எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்.

கேள்வி: ‘தளபதி 64’ படம் பற்றி என்ன நினைக்குறீங்க?

அட்லீ: லோகேஷ் கனகராஜின் ஒர்க் எனக்குப் பிடிக்கும். ‘கைதி’ மற்றும் ‘தளபதி 64’ படங்களுக்கு வாழ்த்துகள் நண்பா.