தமிழ் ராக்கர்ஸ் மூலம் பேஸ்புக் லைவில் பிகில் திரைப்படம் – படக்குழு கடும் அதிர்ச்சி!

bigil movie released in tamil rockers
bigil movie released in tamil rockers

Bigil Full Movie in tamilrockers : அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள பிகில் திரைப்படம் நேற்று (25.10.19) வெளியாகியது. தீபாவளி பண்டிகையொட்டி ரசிகர்களுக்கு விருது படைக்க வெளியான இந்த படத்தை தமிழ் ராக்கர்ஸ் சில மணி நேரத்திலேயே ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர். இதனால் படக்குழு, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கதிர், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து தீபாவளி பண்டிக்கைக்கு விஜய் திரைப்படம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. மெர்சல், சர்க்கார், இப்போது பிகில் என களத்தில் இறங்கிய விஜய்க்கு தமிழ்ராக்கர்ஸின் இந்த ஆன்லைன் லீக் மாபெரும் அதிர்ச்சி தான்.

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று காலை உலகம் முழுவதும் சுமார் 4000-க்கும் அதிகமான திரையரங்குகளில் பிகில் வெளியாகியுள்ளது. திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. படம் குறித்த விமர்சனங்களும் சமூகவலைத்தளங்களில் ஒருபக்கம் வந்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், ரூ.180 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ள பிகில் படத்தை சில மணி நேரத்திலேயே தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைனில் லீக் செய்துள்ளன. ஏற்கனவே படத்தை சட்டவிரோதமாக ஆன்லைனில் வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ்ராக்கர்ஸ் இதுப் போன்ற செயலில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனை இணையவாசிகள் பலரும் பேஸ்புக் லைவ் செய்து வருவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.