சிங்கப்பூரில் தன்னுடைய மெழுகு சிலையை திறந்து வைத்தார் நடிகை காஜல் அகர்வால்..!

Kajal Aggarwal unveils her Madame Tussauds wax statue

சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் மியூசியத்தில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அல்டிமேட் ஃபிலிம் ஸ்டார் எக்ஸ்பீரியன்ஸில் (UFSE) அமைக்கப்பட்டுள்ள தன்னுடைய மெழுகு சிலையை தென்னிந்திய திரைப்பட நடிகை காஜல் அகர்வால் இன்று (பிப்ரவரி 5) திறந்து வைத்தார்.

பொதுவாக பிரபலங்களின் மெழுகு சிலைகள் உருவாக்கப்படுவது வழக்கம். அதில் அதிகம் நடிகர்களும், பாலிவுட் நடிகைகளின் சிலைகளும் இடம்பெறும். தென்னிந்தியாவை பொறுத்தவரை நடிகைகளின் மெழுகு சிலைகள் எங்கும் இடம்பெறவில்லை.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் சாதித்த ஒரே தென்னிந்திய நடிகை காஜல் அகர்வால்..!

மேடம் துசாட்ஸ் மியூசியத்தில் மெழுகு உருவம் பெறும் தென்னிந்திய திரையுலகின் முதல் பெண் நடிகர் என்ற பெருமையை காஜல் அகர்வால் தற்போது பெற்றுள்ளார்.

இது குறித்து கடந்த 2019 டிசம்பர் மூன்றாவது வாரத்தில், அவர் சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று இறுதியாக காஜல் சிங்கப்பூரில் தனது மேடம் துசாட்ஸ் மெழுகு சிலையை வெளியிட்டார்.

காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2, மும்பை சாகா மற்றும் தமிழில் துல்கர் சல்மானுடன் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

மேடம் துசாட்ஸ் சிங்கப்பூரில் ஸ்ரீதேவி, அனுஷ்கா சர்மா, பிரபாஸ், மகேஷ் பாபு மற்றும் கரண் ஜோஹர் ஆகியோரின் மெழுகு சிலைகள் உள்ளன.