சினிமா செய்திகள்

மக்களிடம் பெரும் வரவேற்புப் பெற்ற ‘மகாமுனி’ திரைப்படம் – தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்து அதிர்ச்சி!

magamuni tamil rockers
magamuni tamil rockers

Magamuni Leaked In Tamilrockers: அருள்நிதி நடிப்பில் வெளியான, கிரைம் த்ரில்லரான ’மெளனகுரு’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை இயக்குநர் சாந்தக்குமார் இயக்கியிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு ’மெளனகுரு’ படத்தை ‘அகிரா’ என்ற டைட்டிலில் பெண்ணை முன்னிலைப்படுத்தும் படமாக மாற்றி இந்தியில் ரீமேக் செய்திருந்தார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அந்தப் படத்தில் கதையின் நாயகியாக சோனாக்‌ஷி சின்ஹா நடித்திருந்தார்.

இந்நிலையில் ’மெளனகுரு’ படத்திற்குப் பிறகு 8 ஆண்டுகள் கழித்து ‘மகாமுனி’ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார். ஆர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் இந்துஜா, மகிமா நம்பியார் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜூனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.

கடந்த வெள்ளியன்று வெளியான இப்படம் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மகா, முனி என இருவேடங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஆர்யாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதற்கிடையே ஆர்யாவின் ‘மகாமுனி’ படத்தை ஆன்லைனில் லீக் செய்திருக்கிறது தமிழ்ராக்கர்ஸ். நல்ல விமர்சனங்களைப் பெற்றுவரும் இந்தப் படம் ஆன்லைனில் வெளியானதால், படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related posts