தலைவர் ரஜினியின் தர்பார் இசை மற்றும் பட வெளியீடு தேதி அறிவிப்பு!

Darbar Movie Massive Update!

தலைவர் ரஜினியின் பேட்ட படத்திற்கு பிறகு கிளாஸ் மற்றும் மாஸ் ஆக கலக்க வரும் அடுத்த படம் தர்பார்.

இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் எனவும், நவம்பர் மாத இறுதியில் இசை வெளியாகும் எனவும் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்தார்.

சென்னையில் அனிருத் நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவரிடம் ‘தர்பார்’ படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அனிருத், ரஜினியின் பேட்டை படத்துக்கு பின் தர்பார் வெளிவர இருப்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

பேட்ட திரைப்படத்திற்கு பிஜிஎம் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்து, ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, தர்பார் படத்தின் இசை உருவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். படம் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் அனிருத் தெரிவித்தார்.

கமலின் இந்தியன் 2 மற்றும் ரஜினியின் தர்பார் ஆகிய படங்களுக்கு இசையமைப்பது, குறித்து பேசிய அனிருத், இரண்டு மிகப்பெரிய திரையுலக ஜாம்பவான்களுக்கு இசையமைப்பது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக தெரிவித்தார்.