“வாழ்நாள் சாதனையாளர் விருது” பெறுகிறார் நடிகர் ரஜினிகாந்த்..!!

Rajinikanth to be honoured with special Icon of Golden Jubilee award at International Film Festival of India

திரைத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது நடிகர் ரஜினிகாந்திற்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.

1975 ல் இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் மூலம் ‘அபூர்வ ராகங்கள்’ என்ற படத்தில் திரை உலகில் காலடி பதித்த ரஜினிகாந்த், சுமார் 44 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 167 திரைப் படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு 2000ம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், 2016ம் ஆண்டு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. மேலும், தமிழக அரசின் சார்பில் 1984ம் ஆண்டு கலைமாமணி விருதும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், கோவாவில் வரும் 20ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெற உள்ள 50-வது சர்வதேச திரைப்பட விழாவில், ரஜினிக்கு சிறப்பு விருதாக வாழ்நாள் சாதனையாளர் விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து, நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசுக்கு நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.