தமிழ் படத்திற்கு கிடைத்த பெருமை; அமெரிக்காவில் 4 விருதுகளை வென்ற ராட்சசன்!!

Ratchasan Tamil Movie get 4 Awards

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் மேலும் பலர் இணைந்து நடித்த சைக்கோ த்ரில்லர் திரைப்படமான ராட்சசன் அமெரிக்காவில் நான்கு விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.

சர்வதேச திரைப்பட இணையதளமான ஐ.எம்.டி.பி (IMDb) 2018-ம் ஆண்டின் சிறந்த படங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியப் படங்கள் வரிசையில் ஆச்சரியம் ஏற்படுத்தும் விதமாக 2 தமிழ்ப்படங்கள் இடம்பெற்றன. அதில் ராட்சசனும் ஒன்று.

இந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என்று தமிழ் திரைத்துறையினர் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் விருது கிடைக்காதது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இருந்தபோதிலும், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்சசன் 4 விருதுகளை வென்றுள்ளது.

இது சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த த்ரில்லர், சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. இந்த நிகழ்வு தமிழ் திரைப்பட ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.