சிங்கப்பூர் அரசின் (IMDA) “பிகில்” திரைப்படத்திற்கான ரேட்டிங் என்ன..?

தளபதி விஜய், அட்லி கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் பிகில். இந்த படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி பல சாதனைகளை புரிந்தது.

தமிழ் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தத் திரைப்படம் நாளை வெள்ளிக்கிழமை உலகமெங்கும் வெளியாகும் என்று அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சிங்கப்பூர் அரசின் IMDA ரேட்டிங்கில் பிகில் திரைப்படத்திற்கு PG13 தரப்பட்டுள்ளது. அதாவது பெற்றோர்களின் வழிகாட்டலின் அடிப்படையில் 13 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இப்படத்தை காணலாம் என்று ரேட்டிங் வழங்கியுள்ளது IMDA.

பிகில் IMDA ரேட்டிங்

மேலும், பார்வையாளர்களுக்கு அறிவுரையாக சில வன்செயல் காட்சிகள் படத்தில் இருப்பதாகவும் IMDA கூறியுள்ளது.

You cannot copy content of this page