சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்‌ஷன்’ !

Vishal's next film is titled as 'Action'

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்திற்கு ’ஆக்‌ஷன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு துருக்கி நாட்டில் தொடங்கப்பட்டது. இந்த படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் விஷாலுடன் நடித்துள்ளனர்.

ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை குஷ்பு தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

‘ஆக்‌ஷன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். டட்லி ஒளிப்பதிவாளராகவும், சண்டைக் காட்சிகளை அன்பறிவ் வடிவமைத்துள்ளார்.

பாகிஸ்தான் தீவிரவாதத்தை மையப்படுத்தி தான் இந்தக் கதையை சுந்தர்.சி உருவாக்கியுள்ளார். அங்கு படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்காத காரணத்தால் தான் துருக்கியில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இந்த படம் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான படங்களில் இது மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்