டூலெட் பட நாயகன் சந்தோஷ் நம்பிராஜன் நடிக்கும் புதிய படம்!

Tolet Hero santhosh nambirajan's next movie is Vattara Vazhakku

பல விருதுகளை தட்டி சென்ற டூலெட் தமிழ் படத்தின் கதாநாயகன் சந்தோஷ் நம்பிராஜன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘வட்டார வழக்கு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இளம் தம்பதியர் மற்றும் அவர்களது மகன் ஆகியோரை கதையாக கொண்டு உருவாக்கப் பட்ட படம் டூலெட். இந்த ‘டூலெட்’என்கிற வார்த்தை எப்படி அல்லாட வைக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை கரு ஆகும்.

இப்படத்தின் கதாநாயகன் பல பொருளாதாரச் சிரமங்களுக்கு மத்தியில் தன்னை நிரூபிக்க உதவி இயக்குநர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

இதனை அடுத்து ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய கண்ணுசாமி ராமச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் சந்தோஷ் நம்பிராஜன் கதாநாயகனாக நடிக்கிறார். ‘ஒரு கிடாயின் கருனை மனு’ படத்தின் நாயகி ரவீணா இதில் சந்தோஷ் நம்பிராஜனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

சுரேஷ் மணியன் ஒளிப்பதிவில் வெங்கட்ராஜ் படத்தொகுப்பில் உருவாகும் இப்படத்தை K.S.ஸ்டுடியோ சங்கர் மதுரா டாக்கீஸ் சார்பாக தயாரிக்கிறார்.

மதுரை கிராமத்து மண் சார்ந்த உண்மைச் சம்பவத்தையும் மனிதநேயத்தையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படத்துக்கு வட்டார வழக்கு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தோடனேரி, சமயநல்லூர், சித்தாலங்குடி பகுதியில் 52 நாட்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.