வெற்றியை மட்டுமே கண்ட இயக்குனர் வெற்றிமாறனின் அடுத்த படத்தில் கதாநாயகனாகும் பரோட்டா சூரி..!!

Vetrimaaran next movie with comedy actor soori

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தின் கதாநாயகனாக நடிக்க சூரி ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தின் கதை மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய பட்டாம்பூச்சி விற்பவன் என்ற கதையின் தொகுப்பாகும். ஒரு வயதான மனிதர் இறந்தவுடன் அவரது இறுதிச்சடங்கிற்கு முன் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை.

தமிழ் சினிமாவை பொறுத்த வரை காமெடி நடிகர்கள் ஹீரோவாவது ஒன்றும் புதிதல்ல. நாகேஷ், சந்திர பாபு, விவேக், வடிவேலு, அப்புக் குட்டி, சந்தானம், யோகி பாபு என்று பலரை அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் சூரியும் இணைந்து விட்டார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் சூரி. சமீபத்தில் வெளியாகியுள்ள அசுரன் படம் பூமணியின் வெக்கை நாவலை தழுவி எடுக்கப்பட்டது, வடசென்னை 2 படத்தை எடுப்பதில் வெற்றிமாறன் பிஸியாக இருந்தாலும் இடையே சூரியை வைத்து படம் இயக்க தயாராகி விட்டார்.

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய பட்டாம்பூச்சி விற்பவன் என்ற கதையின் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டது. இதன் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்க இருக்கிறது. மேலும் இப்படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவர இருக்கிறது. சூரி சினிமாவில் அறிமுகமாகியது முதல் இன்று வரை அவர் நடித்து வரும் அத்தனை படமும் காமெடி படமே படத்தில் ஏற்படும் சீரியசான சீன்களில் கூட சூரி ப்ரேமில் இருப்பதில்லை அதையும் தாண்டி ஜீவா,பாண்டிய நாடு, மருது உள்ளிட்ட படங்களில் சில இடங்களில் மட்டுமே சென்டிமெண்ட் காட்சிகளில் நடித்திருக்கிறார். வெற்றிமாறன் இயக்க போகும் இந்த படத்தில் சூரி முதன்முதலில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் .

‘சீமராஜா’ படத்தில் தனது கதாபாத்திரத்துக்காக சிக்ஸ் பேக் வைத்தார் சூரி. அப்போது எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள் வெளியானது, இதையடுத்து பல முன்னணி இயக்குநர்கள் அவரை நாயகனாக வைத்து படமெடுக்க அணுகினார்கள். ஆனால், சூரி எந்தவொரு படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை. வெற்றிமாறன் அணுகியவுடனே நாயகனாக நடிக்க சம்மதித்துள்ளார். இந்தப் படம் கண்டிப்பாக தன் திரையுலக பயணத்தை மாற்றியமைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சூரி.