சினிமா செய்திகள்

தளபதி விஜய் புதிய படத்தில் விஜய் சேதுபதி?

Vijay Sethupathy in Thalapathy Vijay film?

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பிகில்’ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படம் விஜய் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

துணை நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியானது. இதுகுறித்து விசாரித்தபோது, “முதலில் விஜய் சேதுபதியிடம் பேசியது உண்மைதான். ஆனால், தேதி ஒத்துவராத காரணத்தினால் கைவிட்டுவிட்டோம். ஏனென்றால் எங்களுக்கு படப்பிடிப்பை உடனடியாக நடத்த வேண்டியதுள்ளது” என்று படக்குழு தரப்பில் தகவல்கள் கசிந்துள்ளன.

இதில் நாயகியாக நடிக்க கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

Related posts