சினிமா செய்திகள்

இந்தியில் அமீர்கானுடன் அறிமுகமாகும், தமிழ் காமெடி நடிகர் யோகிபாபு!

Tamil comedian Yogi babu in Hindi Movie

பாலிவுட் நடிகர் அமீர்கானுடன், தமிழ் காமெடி நடிகர் யோகிபாபு இணைந்து படம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த புதிய படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியான நிலையில், கூடுதலாக இதே படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சினிமா துறையில் காலெடுத்து வைத்து வெறும் 10 ஆண்டுகளே கழிந்த நிலையில் தற்போது யோகிபாபுக்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

யோகி படத்தில் அறிமுகமான யோகிபாபு பின் தனது தலைமுடியாலும், எதார்த்தமான பேச்சிலும் தமிழக ரசிகர்களை கவர்ந்தார் தற்போது உச்சத்தில் இருக்கும் தமிழ் காமெடி நடிகராக வலம் வரும் அவர் அமீர்கானுடன் நடிக்க இருப்பது இந்திய அளவில் பேசப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts