160 கிலோ மீட்டர் வேகத்தில் வரும் “பிரம்பில்” ஆன்டிசெஃப்டிக்.. நான்கு அடிக்கே மயங்கிச் சரிந்துவிடுவார்கள் – சிங்கப்பூர் பிரம்படி எப்படி இருக்கும்? | Caning in Singapore

Capital punishment in Singapore is a legal penalty

Caning in Singapore: பிரம்படித்தண்டனை சிங்கப்பூரில் வெகு பிரபலம். கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள், பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட 35 குற்றங்களுக்கு பிரம்படி வழங்கப்படும்.

பெண்கள், குழந்தைகள், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பிரம்படித் தண்டனை வழங்கப்படாது. மரண தண்டனை பெற்றவருக்கும் பிரம்படி வழங்கப்படாது.

தவறிழைத்தவர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றால், 10 பிரம்படிகள் வரை வழங்கப்படும். அதிகபட்சமாக 24 அடிகள் வரை வழங்க சட்டத்தில் இடமுள்ளது.

தண்டனை பெறுபவரின் பாதுகாப்புக்காக, சிறுநீரகத்தைப் பாதிக்காமல் இருக்க தடுப்பு வைக்கப்பட்டிருக்கும்.

பிரம்பில் ஆன்டிசெஃப்டிக் மருந்தும் தடவப்பட்டிருக்கும். 160 கிலோ மீட்டர் வேகத்தில் அடி விழும். நான்கு அடிக்கே மயங்கிச் சரிந்துவிடுவார்கள். 5 அடிகள் வாங்கினால் பின்பகுதி முழுவதுமாக  சிதைந்துவிடும். மயங்கினாலும் மயக்கம் தெளியவைத்து அடிப்பார்கள்.

பிரம்படிக்கு முந்தைய செயல்முறை:

மூங்கில் போன்ற ஒரு மரத்தின் குச்சி 1.5 இன்ச் தடிமனாகவும் 4 அடி நீளமாகவும் இருக்க வேண்டும். அடிப்பதற்கு ஒரு நாள் முன்பு ஊற வைப்பார்கள் குச்சி உடையாமல் இருக்க. புண் ஆனால் சீழ் பிடிக்காமல் இருக்க ஆன்டிசெப்டிக் மருந்து தடவப்படும்.

முதல் அடியிலேயே பெரும்பாலானோர் மயக்கம் அடைந்துவிடுவார்கள். பின்பு மயக்கம் தெளியவைத்து தெளிய வைத்து அடிப்பார்கள். மொத்தமாக 24 அடி அடிக்கலாம் என சட்டம் அனுமதி வழங்கியுள்ளது. 4 அடி என்றால் ஒரே காவல் அதிகாரியே அடிப்பார் அதற்கும் மேல் என்றால் இரண்டு மூன்று மாறிக் கொள்வார்கள்.

உச்சகட்ட விசையோடு ஓங்கி அடிக்கவேண்டும் என்பதே விதி. மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்திலே தடி இறங்கும். மயக்கம் தெளிய வைக்க அல்லது மருத்துவரீதியா வலுவாக இருக்கிறாரா என பரிசோதிக்க மருத்துவர் உடன் இருப்பார்.

This article owned by our exclusive editor. Permission required for reproduction.