வெளிநாட்டு வேலைவாய்ப்பின் உண்மைத்தன்மையை எவ்வாறு அறிவது?

How to find reliable jobs?

வெளிநாட்டு வேலைவாய்ப்பு விளம்பரங்கள், சமூக வலை தளங்களில் அதிக அளவில் வலம்வரும் ஒன்று. அதிலும் உங்கள் CV அனுப்பினால் போதும், இலவச ஆள் எடுப்பு என வகை வகையாக விளம்பரங்கள் நம்மை சுற்றி வலம்வந்துகொண்டு தான் இருக்கிறது.

இதன் உண்மைத்தன்மையை எவ்வாறு அறிவது:

முதலில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு விளம்பரங்களில் உள்ள தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டு, Recruit ஏஜென்சியை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களை கேளுங்கள். அவற்றை வைத்து Emigrate இணையதளத்தில் Recruit ஏஜன்சி உண்மையா? அல்லது போலியா? என கண்டறியலாம். மேலும், 24 மணி நேர ஹெல்ப் லைன் எண்களும் அதற்காக உள்ளன.

அரசு அங்கீகாரம் பெற்ற ஏஜன்சிகளிடம் மட்டுமே அணுக வேண்டும்:

நாம் நேரடியாக ஏஜன்சியை அணுக வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் அதிக பணத்தை இழப்பத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம். ஒரு ஏஜன்சி சர்வீஷ் சார்ஜ் ஆக 30,000 ரூபாய் வாங்குகின்றது எனில், சப் ஏஜன்சி உங்களிடம் 60,000 ரூபாய்க்கு மேலாக கொள்ளையடிக்கும். இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

ஆஃபர் கடிதம் மற்றும் விசாவை பரிசோதிக்க எளிய வழிகள்:

இந்திய தூதரக உதவி எண்கள் மற்றும் அஞ்சலக முகவரிகள்

  • +911140503090
  • +911126885021
  • +9144 29862069
  • +914428525610
  • helpline@mea.gov.in
  • helpline@owrc.in
  • poechennai1@mea.gov.in

இந்திய தூதரக தலைமையகம்

  • com.ottawa@mea.gov.in
  • q8embassy@gmail.com

தமிழக அரசின் வெளிநாடுவாழ் தமிழர்கள் நல அமைச்சகம்

  • +914428515288
  • +914428520059
  • nrtchennai@gmail.com
  • nrtchennai@tn.gov.in
  • rehabsl.tn@nic.in
  • nrtsect@gmail.com

அரசு அங்கீகாரம் பெற்ற ஏஜன்சிகள் எவையென கண்டறிய

  • https://emigrate.gov.in/ext/home.action

மேற்கண்ட தொடர்புகளை கொண்டு உறுதிப்படுத்திய பின்னரே விசாவிற்கான ஏஜன்சி சேவை கட்டணம் கொடுக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். வெளிநாடு சென்றபின் ஏதாவது உதவி தேவைப்பட்டாலும் மேற்கண்ட எண்களை தொடர்புகொள்ளலாம்.

நன்றி : சுதாகர்