சிங்கப்பூரில் புதிய பட்டதாரிகள், பணியிடை மாற்றம் செய்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள்!

சிங்கப்பூர் பட்ஜெட்
Singapore Jobs

சிங்கப்பூர் சுகாதாரத் துறையில் சுமார் 6,700 வேலை வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் உள்ளூர்வாசிகளுக்கு, 5,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் மற்றும் மற்றவை பயிற்சி வாய்ப்புகள் என்றும் மனிதவள அமைச்சகம் (MOM) தனது வாராந்திர வேலைவாய்ப்பு நிலை குறித்த அறிக்கையில் இன்று (டிசம்பர் 10) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் அதிகரிக்கும் “ரோபோகால்” அழைப்பு மோசடிகள்!

இந்த வேலை வாய்ப்புகள் புதிய பட்டதாரிகள் மற்றும் பணியிடை மாற்றம் செய்பவர்களுக்கும் பொருத்தமானதாக இருக்கும், மேலும் சுகாதார அனுபவம் இல்லாதவர்களுக்கும் இது பொருந்தும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெரும்பான்மையான வேலை வாய்ப்புகள், அதாவது 75 சதவீதத்திற்கு மேல் நீண்ட கால வேலைகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கிருமித்தொற்று பரவல் காரணமாக, தற்காலிகமாக மனிதவளப் பற்றாக்குறை சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ளது.

நீண்டகால வேலைகளில், 10இல் 7 சுகாதார உதவியாளர்கள், சிகிச்சை உதவியாளர்கள் மற்றும் நோயாளி சேவை கூட்டாளிகள் போன்ற நிர்வாக ஆதரவு வேலைகள் உள்ளன.

மற்றவர்கள் செவிலியர்கள், அதனுடன் தொடர்புடைய சுகாதார வல்லுநர்கள் மற்றும் நிதி மற்றும் மனித வள நிர்வாகிகள் போன்ற வேலைகளும் உள்ளன.

முகக்கவசம் அணியாமல் கடையில் இனவாத கருத்துக்களை கூறியவர்க்கு அபராதம்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…