சிங்கப்பூர் கார்னிவல் சினிமாஸின் பிகில் சிறப்புச் சலுகை..!!

5 lucky winners to get exclusive Bigil T-Shirt.

தளபதி விஜய் மற்றும் நயன்தாரா நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் திரைப்படம் பிகில். இந்த திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூர் கார்னிவல் சினிமாஸ் இப்படத்திற்காக சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இதில் தளபதி விஜய்யின் பிரத்தியேக பிகில் டி-சர்ட்டை 5 அதிர்ஷ்டசாலிகள் வெற்றி பெறுவதற்கான போட்டியை அறிவித்துள்ளது.

நீங்கள் செய்யவேண்டியது;

பிகில் திரைப்படத்திலிருந்து தளபதி விஜய்யின் வெறித்தனம் வசனத்துடன் கூடிய ஒரு டிக் டாக் வீடியோவை உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிடுங்கள்.

இதை #VerithanamContest #CarnivalCinemasSingapore #BigilDiwali என்ற ஹேஷ்டேக்குகளுடன் @carnivalcinemassingapore -க்கு டேக் செய்யுங்கள். மேலும் இதனுடன் பங்கேற்கும் உங்கள் 5 நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை டேக் செய்யவும்.

வெற்றி பெறும் 5 அதிர்ஷ்டசாலிகளுக்கு பிகில் டி-சர்ட் இலவசமாக வழங்கப்படும் என்று கார்னிவல் சினிமாஸ் அறிவித்துள்ளது.