இந்த மாதம் முழுவதும் வெறும் 50 சென்ட்க்கு டீ மற்றும் காபி – NTUC அதிரடி அறிவிப்பு.!!

வெறும் 50 cent -க்கு டீ மற்றும் காபியை இந்த மாதம் முழுவதும் அருந்தி மகிழலாம்.!!

இந்த மாதம் (மே) முழுவதும் NTUC உறுப்பினர்கள் மற்றும் சிங்கப்பூர் Pioneer மக்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். NTUC சார்பாக நடத்தப்படும் Foodfare, Kopitiam Food Court ஆகிய இடங்களில் சுவையான டீ மற்றும் காப்பிகளை வெறும் 50 cent -இல் அருந்தலாம், என்று NTUC அறிவித்துள்ளது.

இந்த அறிய வாய்ப்பு மே மாதத்தோடு முடியப்போவது இல்லை, உங்களுக்காக வரும் ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு இறுதிவரை ஒவ்வொரு புதன்கிழமையும் 50 cent -க்கு தொடர்ந்து கிடைக்கப்பெறும்.

வெறும் டீ காபி மட்டும் தானா ? என்ற கவலை வேண்டாம்.! இன்னும் சில சலுகைகள் கூடுதலாக ஒரு சில காலை உணவுகளுக்கும் உண்டு, என்ற கூடுதல் தகவலையும் NTUC வெளியிட்டுள்ளது.