இலவசம்!! இலவசம்!! காதலர் தின பரிசாக உணவு வகைகளை இலவசமாக வழங்கும் சிங்கப்பூர் உணவகம் – வெளிநாட்டு ஊழியருக்கும் இலவசம்!

roast or steamed chicken

சிங்கப்பூரில் உள்ள OK Chicken Rice உணவகம் மீண்டும் இலவச உணவுகளை வழங்குகிறது.

இன்று பிப். 14 காதலர் தினத்தை முன்னிட்டு உணவகம் இந்த அதிரடி சலுகையை வழங்க உள்ளது. இதில் யார் வேண்டுமானாலும் இலவச உணவுகளை பெறலாம்.

“விரைவில் நாட்டை விட்டு வெளியேறுங்கள்” – நாட்டு மக்களை அழைக்கும் சிங்கப்பூர்!

இன்று மதியம் 3 மணி முதல் வறுத்த அல்லது வேகவைத்த சிக்கனுடன் ரைஸ், porridge உணவு அல்லது நூடுல்ஸை இலவசமாக பெறலாம்.

இருப்பினும், இலவச உணவை உணவகத்தில் அமர்ந்து சாப்பிட வேண்டும், பார்சல் அனுமதி இல்லை. உணவை மொத்தமாக பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படாது.

roast or steamed chicken
OK Chicken Rice / Google Maps

சிங்கப்பூரர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் இருவரும் உணவை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று OK சிக்கன் ரைஸ் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளது.

மேலும், உணவை வாங்கும்போது எந்த வித அடையாள சான்றுகளையும் காட்ட வேண்டிய அவசியமில்லை.

Valentine Community Gift” என்ற வார்த்தைகளை சொன்னால் போதும், அதன் ஆறு கடைகளில் ஏதேனும் ஒன்றில் உணவை பெற்றுக்கொள்ளலாம்.

கடை முகவரி:

  • 721 Ang Mo Kio Avenue 8, S560721
  • 3 Saint George Road, S320003
  • 932 Hougang Avenue 9, S530932
  • 513 Yishun Street 51, S760513
  • 51 Havelock Road, S161051
  • 501 West Coast Drive, S120501

சிங்கப்பூரில் பிப். 14 முதல் தடுப்பூசி தகுதியை தக்க வைத்துக்கொள்ள அலைமோதும் கூட்டம்…!