சினிமா திரையரங்கில் அளவில்லா இலவச பாப்கார்ன் – அண்டா, சட்டிகளோடு படம் பார்க்க கிளம்பிய ரசிகர்கள்

free-popcorn-vietnam-cinema
Discover ASEAN and Lotte Cinema/Facebook

சினிமா திரையரங்கு ஒன்று அளவில்லா இலவச பாப்கார்னை படம் பார்க்க செல்பவர்களுக்கு வழங்கினால் எப்படி இருக்கும்.?

அட ஆமாங்க, தற்போது அது உண்மையாகவே நடந்துள்ளது. வியட்நாமில் உள்ள சினிமா திரையரங்கு இலவச அன்லிமிடெட் பாப்கார்னை படம் பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு வழங்குகிறது.

திரைப்பட பார்வையாளர்கள் பாப்கார்னை அண்டா குண்டா போன்ற பெரிய அளவு பாத்திரங்களில் வாங்கி செல்வதை புகைப்படங்களின் மூலமாக நம்மால் காண முடிகிறது.

இந்த நாட்டுக்கு செல்ல வேண்டாம் – எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்ட சிங்கப்பூர்

சுத்தமான ஒரு பெரிய அண்டாவில் பெண் ஒருவர் அவர் விரும்பும் அளவுக்கு பாப்கார்னை வாங்கி செல்வதை நீங்களே காணலாம்.

குறிப்பிடவேண்டிய ஒன்று, பிளாஸ்டிக் பைகள், காகிதப் பைகள் மற்றும் அட்டைப்பெட்டிகளில் அதனை வாங்க முடியாது. அதற்கு விலக்கு அளித்துள்ளனர்.

வியட்நாமிய திரைப்பட பார்வையாளர்கள் இந்த சவாலை வியக்கத்தக்க வகையில் எதிர்கொண்டனர்.

ஒரு பாப்கார்ன் ரசிகர், ஜம்போ பிளாஸ்டிக் கொள்கலனில் பாப்கார்னை வாங்கி, அதை ட்ராலியில் கொண்டு செல்லும் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

அன்லிமிடெட் பாப்கார்ன் ப்ரோமோ அடுத்த நவ.30 வரை நீடிக்கும் என Lotte Cinema அறிவித்துள்ளது.

இருப்பினும், இந்த சலுகை நாள் ஒன்றுக்கு முதல் 500 பேருக்கு மட்டுமே.

டாக்ஸி ஓட்டுனரை தாக்கிய ஆடவருக்கு சிறை