கிட்டத்தட்ட 700 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு – Giant அதிரடி

giant-groceries-savings
Giant

சிங்கப்பூரில் மாறிவரும் கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பொதுமக்களுக்கு சில நல்ல செய்திகள்.

சிங்கப்பூரின் முக்கிய பல்பொருள் அங்காடிகளில் ஒன்றான Giant, சராசரியாக 20 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான பயண ஏற்பாட்டில் யார் யார் தகுதி பெறுவர்?

நூற்றுக்கணக்கான தினசரி அத்தியாவசிய பொருட்களின் மீதான விலையை அது குறைத்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள பொதுமக்கள் பலர் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியின் மத்தியில் இந்த சேமிப்பு பயனுள்ளதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், கடைக்காரர்களுக்கு சில நிதி பாதுகாப்பை வழங்குவதற்கும் தொற்றுநோய் தொடர்பான சில கவலைகளை எளிதாக்குவதற்கும் இது மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அதாவது கிட்டத்தட்ட 700 பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவற்றில் பல பொருட்களின் விலை 25 சதவிகிதத்திற்கும் மேல் கிட்டத்தட்ட 40 சதவிகிதமாக குறைந்துள்ளது.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட S$100 மளிகை வவுச்சரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு Giant கூடுதல் S$10 வவுச்சரை வழங்குகிறது.

மேலும் தகவலை நீங்கள் இங்கே காணலாம்.

இனி இந்த நாட்டிற்குச் செல்ல கட்டுப்பாடுகள் கிடையாது!