சிங்கப்பூர் ராபின்சன்ஸ் கிளைகளில் 70% வரை அதிரடி “Black Friday” தள்ளுபடி விற்பனை!

Robinsons Black Friday sale
Robinsons Black Friday sale (PHOTO from Google Maps and Twitter)

சிங்கப்பூர் ராபின்சன்ஸ் (Robinsons) அதனுடைய கடைசி Black Friday விற்பனையை இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) நடத்துகிறது.

அதன் கடைசி இரண்டு விற்பனை நிலையங்களில் 70 சதவீதம் வரை அதிரடி தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது.

வரும் வாரங்களில் முக்கிய விநியோக நிறுவன ஊழியர்களுக்கு COVID-19 சோதனை – MOH

அதாவது, ஹீரென் (Heeren) மற்றும் ராஃபிள்ஸ் சிட்டி (Raffles City) விற்பனை நிலையங்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தள்ளுபடி விற்பனை நடைபெறும்.

இந்த Black Friday விற்பனை, ராபின்சன்ஸின் கடனை செலுத்த தேவைப்படும் தொகையை திரட்டும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், நேற்று வியாழக்கிழமை பிற்பகல் கடன் வழங்குநர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் மொத்தம் 440 பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்கள் குறைந்தது S$31.7 மில்லியன் கடன்பட்டுள்ளனர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்த தள்ளுபடி விற்பனையில், ராபின்சன் கடைகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் பேஷன், அழகு, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கலாம்.

குழந்தையுடன் கவலை மறந்து விளையாடும் வெளிநாட்டு ஊழியர்கள்

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…