சிங்கப்பூர் கோல்டன் வில்லேஜ் திரையரங்கின் அதிரடி சிறப்பு சலுகை.!!

Singapore Golden Village offers
Photo Credit : Capitaland

சிங்கப்பூரில் கோல்டன் வில்லேஜ் திரையரங்கில் அக்டோபர் 19 முதல் 22 வரை திரையிடப்படும் படங்களுக்கு S$7 மட்டும் என்ற சலுகையை அறிவித்துள்ளது.

இந்த சலுகைக்கான டிக்கெட்டுகள், அக்டோபர் 16 வெள்ளிக்கிழமை முதல் வழங்க தொடங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும்போது விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு கடுமையான தண்டனை..!

சாதாரணமாக வாரத்தின் இறுதி நாட்களில் ஒரு டிக்கெட்டின் விலை $9.50 ஆகும்.

இதற்கான டிக்கெட்டுகளை அனைத்து கோல்டன் வில்லேஜ் அலுவலகங்களிலும், ஆன்லைனிலும் மற்றும் IGV ஆப் மூலமாகவும் வாங்கலாம்.

இந்த சலுகை தினசரியாக முதல் 500 டிக்கெட்டுகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் அதிகபட்சம் ஐந்து டிக்கெட்டுகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

இந்த சலுகையில் ஒரு பெரிய பாப்கார்ன், குளிர்பானங்கள் மற்றும் கோல்டன் வில்லேஜின் பிரத்தியேக ஸ்கூபி-டூ (Scooby Doo) டம்ளர் ஆகியவை அடங்கும்.

Photo Credit : Golden Village

இதையும் படிங்க : சிங்கப்பூர் கொரோனா: 50-க்கும் குறைவானவர்கள் சமூக தனிமைப்படுத்தும் வசதிகளில் பராமரிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…