கோவிட்-19 நடவடிக்கை தளர்வு: “பீர் எடு கொண்டாடு” என இலவச பீர் வழங்கும் Tiger Beer!

Unsplash

சிங்கப்பூரில் நாளை மார்ச் 29 முதல் இரவு 10:30 மணிக்கு மேல் மதுபான பாரில் பீர் அருந்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை கொண்டாடும் வகையில், பீர் எடு கொண்டாடு என்பது போல், டைகர் பீர் (Tiger Beer) தேர்ந்தெடுக்கப்பட்ட பார்களில் மட்டும் இலவசமாக பீர்களை வழங்குகிறது.

“நீ இங்க வேலைக்கு வந்திருக்க, நீ போ”… சிங்கப்பூர் MRT ரயிலில் வெளிநாட்டு ஊழியருக்கு, சிங்கப்பூரருக்கும் கடும் வாக்குவாதம்!

டைகர் பீர் Facebook பதிவில் கூறியதாவது; அதன் முதல் சுற்று இலவசத்தைப் பெற விரும்புபவர்கள் “இந்த பதிவை பாரில் காட்டிவிட்டு இலவச பீரை வாங்கி கொண்டாடத் தயாராகுங்கள்”.

அதாவது மார்ச் 29 அன்று, இரவு 10:30 முதல் 10:31 மணி வரையுள்ள அந்த ஒரு நிமிடத்தில் மட்டும் இந்த சலுகை வழங்கப்படும்.

ஆனால், இலவச பீர்கள் எந்தெந்த பார்களில் கிடைக்கும் என்ற பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை.

இன்னும் அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் வெளியிடவில்லை என்பதையும் டைகர் பீர் கவனமாக சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த விலைமதிப்பற்ற 60 வினாடிகளுக்குள் உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சிக்க விரும்பினால், டைகர் பீரின் பதிவு இதோ

ஹௌகாங் காபி கடையில் 15 பேர் பெரும் சண்டை: உலோகக் கம்பி..உடைந்த நாற்காலிகள் – மருத்துவமனையில் ஒருவர்