கொரோனா வைரஸ் (COVID-19): சிங்கப்பூரில் பங்குனி உத்திரத் திருவிழா ரத்து..!

Coronavirus (COVID-19): panguni uthiram festival cancelled in Singapore
Coronavirus (COVID-19): panguni uthiram festival cancelled in Singapore

சிங்கப்பூரில் COVID-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, பங்குனி உத்திரத் திருவிழாவை ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள COVID-19 கிருமிப்பரவல் சூழலைக் கருத்தில்கொண்டு கார்த்திகை, பங்குனி உத்திரம் ஆகிய நிகழ்வுகளின்போது காவடி எடுப்பது ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது, இதுகுறித்த தகவலை “செய்தி” வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 பரவும் அபாயத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள்..!

இருப்பினும் அன்றாட வழிபாடுகள் வழக்கம்போல நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதே போல், அடுத்த மாதம் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருந்த பங்குனி உத்திரத் திருவிழாவும் ரத்து செய்யப்படுவதாக முருகன் திருக்குன்றம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன் முதல்நாள் ஏப்ரல் 5 அன்று ரத ஊர்வலமும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இதுகுறித்த தகவலை “செய்தி” வெளியிட்டுள்ளது.

இதில் பால்குடம், காவடி ஆகியவை எடுப்பது, மேலும் முடி இறக்குதல், அன்னதானம் ஆகியவையும் ரத்து செய்யப்படுகிறது.

பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் இருவர் நோய்த்தொற்று காரணமாக உயிரிழப்பு..!