சிங்கப்பூரில் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமியின் பக்தி இசை நிகழ்ச்சி..!

Sri Layan Sithi Vinayagar Temple

விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ்‌ செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமியின் பக்தி இசை சிங்கப்பூரில் நடைபெற உள்ளது.

சிங்கப்பூரில் புகழ்பெற்ற ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயில் விழாவில் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஆகியோரின் பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

வரும் ஜனவரி 4, சனிக்கிழமை மாலை 7.00 மணி முதல் 9.30 மணி வரை ஊட்ரம் பார்க் MRT அருகில் இருக்கும் அரங்கில் நடைபெற உள்ளது.

முக்கிய குறிப்பாக இந்த விழாவில் அனைவருக்கும் அனுமதி முற்றிலும் இலவசம்.

இவர்கள் இருவரும் பாடிய தமிழா் திருநாள் பாடல் சிங்கப்பூரில் சமீபத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.