சிங்கப்பூரின் பழமையான ஸ்ரீ மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா – பக்தர்கள் குவிந்தனர்..!

Sri Mariyamman temple Firewalking Ceremony ( Photo: Seithi MediaCorp)

ஸ்ரீ மாரியம்மன் கோயில் சிங்கப்பூரின் பழமையான இந்து கோவிலாகும். சிங்கப்பூரின் வெற்றிகரமான முதல் இந்திய தொழிலதிபர் நாராயண பிள்ளை என்பவரால் இந்த கோயில் 1827 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

சைனாடவுனில் அமைந்துள்ள இந்த கோயிலின் அலங்கார கோபுர நுழைவாயில் அல்லது கோபுரம் பல தலைமுறை இந்து வழிபாட்டாளர்களுக்கும் சிங்கப்பூரர்களுக்கும் ஒரு அடையாளமாக உள்ளது. அன்னை ஸ்ரீ மாரியம்மனின் நினைவாக இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் தீமிதி திருவிழா ஒன்றாகும். ஆண்டுதோறும் அக்டோபர் / நவம்பர் மாதங்களில் இந்த தீமிதி திருவிழா நடைபெறும்.

இதுவரை சுமார் 4100 ஆண் பக்தர்கள் தீமிதித் திருவிழாவுக்குப் பதிவு செய்ததாக இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த தீமிதி திருவிழாவிற்கு கடந்த ஆண்டு 22,000 மரக்கட்டைகள் பயன்படுத்தப்பட்டன. இந்த ஆண்டு அதை விட அதிகமாக 25,000 மரக்கட்டைகள் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா இன்று நடைபெற உள்ளது. இதன் காரணமாக இந்து பக்தர்கள் ஸ்ரீ மாரியம்மன் கோயில் வளாகத்தில் ஒன்று கூடியுள்ளனர்.