பேருந்து சேவை தொடர்பான எஸ்.எம்.ஆர்.டி.யின் அறிவிப்பு!

Photo: SMRT BUS WIKIPEDIA

 

சிங்கப்பூரில் உள்ள பொது போக்குவரத்து சேவையில் முக்கிய நிறுவனமாக திகழ்வது எஸ்.எம்.ஆர்.டி. நிறுவனம் (SMRT). இந்த நிறுவனம் பேருந்து மற்றும் ரயில் சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.

 

இந்த நிலையில் எஸ்.எம்.ஆர்.டி. நிறுவனம் இன்று (18/06/2021) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சிங்கப்பூரின் தாம்சன் சாலையின் குறுக்கே ஒரு பாதசாரி உயர்மட்ட பாலம் (Construction Of Pedestrian Overhead Bridge Across Thomson Road) கட்டப்படுவதால், ஜூன் 27- ஆம் தேதி அன்று அதிகாலை 12.00 AM மணி முதல் 05.30 AM மணி வரை 980 என்ற எண் கொண்ட பேருந்து சேவை (Bus Service No 980) சில பேருந்து நிறுத்தங்களைத் தவிர்க்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

அதன்படி, தாம்சன் சாலையில் (Thomson Road) 980 என்ற எண் கொண்ட பேருந்து சேவை Opp Thomson Med Ctr (பேருந்து நிறுத்தக் குறியீடு 50059), Opp Novena Lodge (பேருந்து நிறுத்தக் குறியீடு 50049), Novena Stn (பேருந்து நிறுத்தக் குறியீடு 50038) ஆகிய மூன்று பேருந்து நிறுத்தங்களைத் தவிர்க்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.” இவ்வாறு எஸ்.எம்.ஆர்.டி. நிறுவனம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

 

எஸ்.எம்.ஆர்.டி.யின் பேருந்து சேவைகள் (SMRT Bus Services) தொடர்பான மேலும் விவரங்களுக்கு எஸ்.எம்.ஆர்.டி.யின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் 1800 336 8900 என்ற தொலைபேசி எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.