வெளிநாட்டு ஊழியர்களுக்கு S$1 மில்லியன் மதிப்பிலான ‘சிங்கப்பூர் ரீடிஸ்கவர்’ ரசீதுகள் நன்கொடை..!

(Photo:unfoldtimes)

S$1 மில்லியனுக்கு அதிகமான மதிப்புடைய ‘சிங்கப்பூர் ரீடிஸ்கவர்’ ரசீதுகள் நன்கொடையாக வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் வசதி குறைந்தவர்களுக்கு வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் சுமார் S$1 மில்லியன் மதிப்பில் சிங்கப்பூர் ராட்டினத்திற்கு செல்ல 27,000க்கும் அதிகமான நுழைவுச்சீட்டுகளை ‘சிங்கப்பூர் ரீடிஸ்கவர்’ ரசீது வடிவில் மக்கள் நன்கொடை வழங்கியுள்ளதாக itsrainingraincoats என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.

சிறுவனை கீழே தள்ளி, காலால் மிதித்து துன்புறுத்திய வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு சிறை

கடந்த ஜனவரி மாதம் இறுதி முதல் தொடங்கிய இந்த நன்கொடைத் திட்டம் வாயிலாக 5,600க்கு அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் பயனடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறைந்தளவு 2,000 நுழைவுச்சீட்டுகளை இலக்காகக் கொண்டிருந்ததாகவும், ஆனால் மக்களிடமிருந்து பெற்ற உதவி அதிக அளவில் இருந்ததாக கூறி நன்றிகளையும் அமைப்பின் நிறுவனரான திருவாட்டி தீபா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

இதுபோன்று சுற்றுலா வர்த்தகங்களும், இந்த ரசீதை பயன்படுத்தும் இணையத்தளங்களும் வசதி குறைந்தவர்களுக்கு உதவும்வகையில் ரசீது பெறும் திட்டங்கள் சிலவற்றைத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 26வது மாடியிலிருந்து விழுந்த 2 சிறுமிகள் மரணம்