சிங்கப்பூரில் 10 கார்கள் சங்கிலி தொடராக மோதி விபத்து – காணொளி

10-car chain collision
(Photos: SG Road Vigilante/FB & Zoom Zoom SG/FB)

ஆயர் ராஜா அதிவேக நெடுஞ்சாலை (AYE) நோக்கி செல்லும் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயில் (ECP) திங்கள்கிழமை (பிப். 22) காலை 10 கார்கள் சங்கிலி தொடராக மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 47 வயது பெண் ஓட்டுநர் ஒருவர் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

சிங்கப்பூரில் இந்த மாதத்தில் மட்டும் 7 வேலையிட மரணங்கள்..!

இந்த விபத்தின் படங்கள் மற்றும் காணொளி ஆகியவை வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டு, பகிரப்பட்டு வருகிறது.

இந்த மோதல் சம்பவம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது என்று விபத்து நடந்த நேரத்தில் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) ட்வீட் மூலம் எச்சரிக்கை செய்தது.

காலை 9:21 மணிக்கு ஒன்பது கார்கள், ஒரு டாக்ஸி சம்பந்தப்பட்ட விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக Mothership கேள்விகளுக்கு பதிலளித்த காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பான காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

காணொளி: SgRoadsaccidentcom/videos

உட்லேண்ட்ஸில் கடை ஒன்றில் நகைகளை திருடிய சந்தேக நபர்கள் இருவர் கைது