இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்தோருக்கு தொடரும் நோய்த்தொற்று பாதிப்புகள்..!

10 new imported cases and all had been placed on stay-home notice upon their arrival in Singapore
10 new imported cases and all had been placed on stay-home notice upon their arrival in Singapore - MOH

சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி, புதிதாக 42 பேருக்கு கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனுடன் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57,357ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில், 28 பேர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் ஆவார்கள். அவர்களில் 16 பேர் முன்னர் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள், அவர்கள் கிருமிப்பரவலை தடுக்க முன்னரே தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதையும் படிங்க : காவல்துறையின் சோதனைக்கு காரை நிறுத்த மறுத்து, வேகமாக சென்று மரத்தில் மோதி விபத்து..!

மேலும், கண்காணிப்புச் சோதனையின் மூலம் மீதமுள்ள 12 பேருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

புதிய சம்பவங்களில், சமூக அளவில் 4 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்த 10 பேருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 30 மற்றும் ஆகஸ்ட் 31 ஆகிய தேதிகளில் இந்தியாவில் இருந்து திரும்பிய 2 சிங்கப்பூரர்கள், 5 நிரந்தரவாசிகள் இதில் அடங்குவர். மற்றொருவர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவிலிருந்து இங்கு வந்துள்ளார்.

அவர்கள் அனைவரும் சிங்கப்பூர் வந்ததில் இருந்து வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவில் வைக்கப்பட்டனர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 18 பேர் ஒன்றுகூடிய சம்பவம் – துணை ஏற்பாடு செய்தவருக்கு அபராதம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…