சிங்கப்பூர் முழுவதும் நடத்திய தொடர் சோதனைகளில் போதைப்பொருள் குற்றவாளிகள் 10 பேர் கைது..!

10 people arrested, about S$800,000 worth of drugs seized
10 people arrested, about S$800,000 worth of drugs seized (Photo: Central Narcotics Bureau)

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB) அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை சிங்கப்பூர் முழுவதும் நடத்திய தொடர் சோதனைகளில் சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் குற்றவாளிகள் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

உட்லேண்ட்ஸ், சோவா சூ காங் (Choa Chu Kang) மற்றும் Teck Whye உள்ளிட்ட இடங்களில் சந்தேக நபர்கள், அதாவது 28 வயதுக்கும் 62 வயதுக்கும் இடைப்பட்ட 9 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று CNB செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியதாக இருவர் கைது – ஓட்டுநர் உரிமம் ரத்து..!

இந்த பல்வேறு சோதனை நடவடிக்கைகளில் சுமார் S$800,000 மதிப்புள்ள போதை மருந்துகளும் கைப்பற்றப்பட்டன.

மொத்தம் பல்வேறு போதை பொருட்கள், டேப்லெட் ஆகியவை கைப்பற்றப்பட்டன, மேலும் S$18,400 ரொக்கமும் கைப்பற்றப்பட்டன.

சுமார் 5,290 போதைப்புழங்கிகள் ஒரு வாரம் பயன்படுத்த போதுமான அளவு ஹெராயின் இதில் அடங்கும் என்று CNB தெரிவித்துள்ளது.

இதில் சந்தேக நபர்களின் போதைப்பொருள் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து 5ஆம் கட்டமாக தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg