சிங்கப்பூரில் தேநீர் அருந்த நண்பர்களுடன் ஒன்றுகூடியதாக இந்தியர்கள் 10 பேர் மீது குற்றச்சாட்டு..!

6-bangladeshi-nationals-arrested-for-gang-robbery-
(Photo: TODAY)

COVID-19 கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட சட்டங்களை மீறியதற்காக ஏழு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் மீது வெள்ளிக்கிழமை (மே 22) பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

34A கிம் கீட் ரோட்டில் (34A Kim Keat Road) வசித்து வரும் மூன்று பேர், கடந்த மே 5 காலை மேலும் ஏழு பேரை தனது வசிப்பிடத்திற்கு அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்..!

COVID-19 விதிமுறைகளின் கீழ், மற்ற வீடுகளின் உறுப்பினர்களைச் சந்திப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்கான தண்டனையாக அதிகபட்சம் ஆறு மாத சிறைத்தண்டனை, S$10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இதில் ஒன்றுகூடிய அவர்கள் 10 பேரும் இந்திய குடிமக்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மே 5ஆம் தேதி காலை 11.30 மணியளவில் புல்லர் (Bhullar Jasteena) என்ற அதில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை வீட்டிற்குள் நுழைய அனுமதித்ததாக அவினாஷ் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதாவது பள்ளிப் பாடம் சம்பந்தமாக தயாராவதற்கு அவினாஷைச் சந்தித்ததாக புல்லர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் மாணவரான தம்மிடம், அதிக தொகையை அபராதமாகச் செலுத்தப் போதுமான பணம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், புல்லரைத் தவிர மற்ற 9 பேரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளவுள்ளனர்.

இந்த வழக்கு சம்பந்தமாக விசாரனை அடுத்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெளிநாட்டு ஊழியர்களுக்கு தற்காலிக தங்கும் வசதிகளாக மாற்றப்பட உள்ள இரண்டு முன்னாள் பள்ளி வளாகங்கள்..!