சிங்கப்பூரில் 11 நிறுவனங்களுக்கு அபராதம் விதித்த மனிதவள அமைச்சகம்

foreign workers singapore job illegal
(Photo: Ministry of Manpower)

வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு, அவ்வாறு செய்வதை உறுதி செய்ய தவறிய 11 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

கடந்த மே 8 முதல் 21 வரை, அதாவது கடந்த சில வாரங்களில் சுமார் 530க்கும் மேற்பட்ட வேலையிடங்களில் MOM ஆய்வு மேற்கொண்டபோது அந்நிறுவனங்கள் பிடிப்பட்டன.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் புதிதாக ஊழியர் ஒருவருக்கு தொற்று – விவரம்

கடந்த மே 16 முதல், சிங்கப்பூரின் 2ஆம் கட்டத்தின் ஒரு பகுதியாக, வீட்டிலிருந்து வேலை செய்ய சாத்தியம் உள்ள ஊழியர்கள் அவ்வாறு செய்வதை உறுதிசெய்யுமாறு முதலாளிகளுக்கு MOM தெரிவித்தது.

வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாத ஊழியர்களுக்கு மட்டுமே MOM அனுமதி வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.

மற்ற அனைத்து ஊழியர்களும், அவர்கள் வேலைகளை வீட்டிலிருந்து செய்ய வேண்டும் என்றும் அது கூறியது.

சிறப்பு விமானங்கள் மட்டுமே இந்தியா-சிங்கப்பூர் இடையில் இயக்கப்படுகின்றன – ஒவ்வொரு நாளும் 25 பயணிகள் சிங்கப்பூர் வருகை