சிங்கப்பூரில் மேலும் புதிதாக 12 பேருக்கு COVID-19 தொற்று உறுதி..!

12 new COVID-19 cases in Singapore, 8 discharged: MOH
12 new COVID-19 cases in Singapore, 8 discharged: MOH (Photo : Mothership)

சிங்கப்பூரில் புதிதாக 12 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (மார்ச் 14) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 212ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை கரம்பிடித்த சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழக இளைஞர்..!

குணமடைந்தோர்

மேலும், அன்றைய நிலவரப்படி மருத்துவமனையிலிருந்து 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

தற்போது வரை மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 105ஆக உள்ளது.

மருத்துவமனையில் உள்ளோர்

மருத்துவமனையில் இன்னும் 107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் உள்ள பெரும்பாலானோரின் உடல்நிலை சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகிறது என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மேலும், 14 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் வேலை அனுமதி (Work Pass) பெற்ற இந்தியர் ஒருவர் பாதிப்பு..!

புதிய சம்பவங்கள்

புதிதாகக் கிருமித்தொற்றியவர்களில் 9 பேர் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.

ஒருவர் சாஃப்ரா ஜூரோங் குழுமத்துடன் தொடர்புடையவர்.

ஒருவர் முன்னர் இந்த கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவரோடு தொடர்புடையவர்.

ஒருவருக்கு மேற்குறிப்பிட்ட எதனுடனும் தொடர்பில்லை.

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil