சிங்கப்பூரில் மேலும் 127 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்று இல்லை..!

Singapore Migrant Workers dorm Congregate Ramadan
(Photo: Nuria Ling/TODAY)

சிங்கப்பூரில் துவாஸ் வியூ தங்கும் விடுதி உட்பட மேலும் 127 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் COVID-19 தொற்று முற்றிலும் இல்லாத இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 114 தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் 13 தற்காலிக கட்டுமான விடுதிகள் ஆகியவை அடங்கும் என்று மனிதவள அமைச்சு (MOM) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தனது வீட்டில் இறந்து கிடந்த இளம்பெண் – காவல்துறை விசாரணை..!

மேலும், தேவைக்கு கட்டப்பட்ட குணமடைந்த ஊழியர்களுக்கான 12 தங்குமிடங்களில், 35 பிளாக்குகள் இதில் கிருமித்தொற்று முற்றிலும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஜுராங் பென்ஜுரு 1, ஹோம்ஸ்டே லாட்ஜ், PPT லாட்ஜ் 1A, Alaunia லாட்ஜ் மற்றும் துவாஸ் வியூ தங்கும் விடுதி ஆகியற்றில் உள்ள பிளாக்குகள் அடங்கும்.

மொத்தத்தில், 14 குணமடைந்த ஊழியர்களுக்கான விடுதிகளில் 52 பிளாக்குகள் மற்றும் 1,109 தங்கும் விடுதிகளும் COVID-19 அபாயம் நீங்கிய பகுதிகளாக உறுதிசெய்யப்பட்டுள்ளன.

திங்கள்கிழமை நிலவரப்படி, சுமார் 273,000 வெளிநாட்டு ஊழியர்கள் கிருமித்தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளனர் அல்லது அவர்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது மொத்த வெளிநாட்டு ஊழியர்களில் இந்த எண்ணிக்கை 89 சதவீதம் ஆகும்.

இந்த எண்ணிக்கையானது ஒரு வாரத்திற்கு முன்பு சுமார் 262,000ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : வேலை அனுமதி உடைய பயணிகள் உட்பட… மின்னணு கண்காணிப்பு சாதனத்தை அணிய வேண்டும்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg