சிங்கப்பூரில் விளக்குக் கம்பம் விழாமல் தடுத்த 13 பேருக்கு பொதுநல விருது!!

13 people award lamp post fall
Photo: SPF

சிங்கப்பூரில் இன்று (பிப். 23) மத்திய காவல் பிரிவில் நடைபெற்ற விழாவில் 13 பேருக்கு பொதுநல உணர்வு கலந்த செயலுக்காக விருதுகள் வழங்கப்பட்டன.

கடந்த ஆண்டு டிசம்பர் 12, அன்று விளக்குக் கம்பம் ஒன்று சாலையில் விழாமல் தடுக்க அவர்கள் முன்வந்தனர்.

சரளமாக மாண்டரின், ஹொக்கியன் மொழி பேசி வாடிக்கையார்களை ஈர்க்கும் இந்திய ஊழியர்!

அதன் பின்னர், அந்த விளக்குக் கம்பம் அதிகாரிகளால் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டது.

அவர்களின் பொதுநல முயற்சியால், யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை மற்றும் சொத்துகளுக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.

Photo: SPF

உதவி காவல் அதிகாரி கிரிகோரி டான் சீவ் ஹின், மத்திய காவல் பிரிவின் உயர் அதிகாரி, தன்னலமற்ற அவர்களுக்கு விருது வழங்கியதில் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

மேலும், சுற்றுப்புறத்தை பாதுகாப்பாக வைத்திருக்க அவர்களின் செயல் மற்றவர்களை ஊக்குவிக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் 10 கார்கள் சங்கிலி தொடராக மோதி விபத்து – காணொளி