சீன அதிகாரியின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட சுமார் 13,500 கிலோ தங்கக் கட்டிகள், சீன பணக்காரர் ஜாக் மாவிற்கு போட்டியா ?

13,500kg of gold bars allegedly found in top Chinese official’s home

சீன மாகாணமான ஹைனானில் உள்ள டான்ஜோ நகரில், சீன மூத்த அதிகாரியின் வீட்டின் அடித்தளத்தில் 13.5 டன்களுக்கும் அதிகமான தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சீன ஊடகம் Wenxuecity தெரிவித்துள்ளது.

கண்டெடுக்கப்பட்ட இந்த தங்கக் கட்டிகளின் மதிப்பு சர்வதேச வர்த்தக விலைகளின்படி, S$ 884.8 மில்லியன் மதிப்புடையவை என்று கூறப்படுகிறது.

58 வயதான ஹைகோவின் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளராக இருந்த சாங் குய் என்ற அதிகாரி லஞ்சம் வாங்கியதாக சந்தேகிக்கப்பட்ட RMB268 பில்லியன் (S$ 51.7 பில்லியன்) ஐ சீன அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

சாங் -ன் ஒருங்கிணைந்த நிகர மதிப்பு சீனாவின் மிகப்பெரிய தொழிலதிபர் ஜாக் மாவை விட அதிகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மேலும், சாங் “பொருளாதார குற்றங்கள்” செய்ததாக நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.