COVID-19 பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறியதாக 14 ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு..!

14 men charged for breaching COVID-19 safe distancing measures
14 men charged for breaching COVID-19 safe distancing measures

சிங்கப்பூரில் COVID-19 விதிமுறைகளின் கீழ் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளை (SDM) மீறியதற்காக பதினான்கு ஆடவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதில் 19 முதல் 59 வயது வரையிலான அந்த ஆடவர்கள், அங் மோ கியோ, தெம்பனீஸ் மற்றும் ஹேவ்லாக் ரோட்டில் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் தனித்தனியாக ஈடுபட்டனர்.

இதையும் படிங்க : ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் முன்னாள் அறங்காவலர் மீது தடையைமீறி பணிகளைத் தொடர்ந்ததாக குற்றச்சாட்டு..!

பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகளுக்கு இணங்காத அல்லது சட்ட விதிமுறைகளை மீறும் எவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்க மாட்டார்கள் என்று காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

COVID-19 பரவுவதைத் தடுக்க நாம் அனைவரும் தங்கள் பங்கைச் செய்ய வேண்டும் என்பதை பற்றியும் வலியுறுத்தியுள்ளனர்.

அங் மோ கியோ

ஏப்ரல் 11ஆம் தேதி, 59 வயதான ஒருவர் தனது நண்பருடன் பிளாக் 511 ஆங் மோ கியோ அவென்யூ 8ல் மது அருந்திவிட்டு அங்கு உணவு சாப்பிட்டார்.

சர்க்யூட் பிரேக்கர் காலத்தில் ஒன்றுகூடியதற்காக அவருக்கு நிபந்தனை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் முகக் கவசம் அணியாததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தெம்பனீஸ்

54 வயதான ஆடவர், ஏப்ரல் 30ஆம் தேதி தனது வீட்டை விட்டு வெளியேறி, பிளாக் 202 தெம்பனீஸ் ஸ்ட்ரீட் 21இல் நண்பருடன் அரட்டை அடித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு முன்னர், அந்த நபர் தனது வீட்டை விட்டு வெளியேறியதற்காக வேறு இரண்டு சந்தர்ப்பங்களில் அமலாக்க அதிகாரிகளால் எச்சரிக்கை பெற்றுள்ளார்.

அதிகாரிகளிடமிருந்து பலமுறை எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் அவர் ஒத்துழைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அபராதத்தையும் செலுத்தாததாகக் கூறப்படுகிறது.

ஹேவ்லாக்

ஜூன் 11 அன்று, ஹேவ்லாக் ரோட்டில் வசிக்கும் ஆறு ஆடவர்கள், மற்ற ஆறு ஆடவர்களை தங்கள் வீட்டிற்கு அழைத்து ஒன்றுகூடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் எட்டு பேர் அருகிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு புகைபிடிக்கவும் அரட்டையடிக்கவும் சென்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் “சர்க்யூட் பிரேக்கர்” விதிமுறைகளை மீறிய 6 பேரின் வேலை அனுமதி ரத்து – இதுவரை 140 பேரின் வேலை அனுமதி ரத்து..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg