சிங்கப்பூரில் விதிமுறைகளை மீறிய தொழிலாளர்கள் உட்பட 19 நபர்களுக்கு தண்டனை..!

19 work pass holders, employers punished for flouting COVID-19 Leave of Absence requirements
19 work pass holders, employers punished for flouting COVID-19 Leave of Absence requirements (Photo: Ngau Kai Yan)

சிங்கப்பூரில் COVID-19 காரணமாக மனிதவள அமைச்சகம் (MOM) வழங்கிய கட்டாய விடுப்பு (LOA) விதிமுறையை மீறியதற்காக மொத்தம் 19 வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் முதலாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

விதிமுறைகளை மீறிய 10 வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்களையும், மேலும் 9 முதலாளிகளையும் அமைச்சகம் கண்டறிந்துள்ளதாக செய்தி (பிப்ரவரி 24) வெளியீட்டில் MOM தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி – சுகாதார அமைச்சகம்..!

சிங்கப்பூரில் இந்த கொரோனா வைரஸ் நிலைமையை கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு சமீபத்திய பயணம் மேற்கொண்ட அனைத்து வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்களும் சிங்கப்பூருக்கு வந்தவுடன் கட்டாய 14 நாள் விடுப்பு எடுக்க வேண்டும்.

இந்நிலையில், விதிமுறைகளை மீறிய அந்த 10 வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்களில், 6 பேரின் வேலை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த LOA விதிமுறை பற்றி அறியவில்லை என்றும் சிலர் கூறியுள்ளனர், இருப்பினும் MOM இதுபற்றி முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வேலை உரிமம் ரத்து செய்யப்பட்ட அந்த தொழிலாளர்களுக்கு நிரந்தரமாக சிங்கப்பூரில் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முதலாளியின் வேலை அனுமதி சலுகைகளும் இரண்டு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு வெளிநாட்டு தொழிலாளியின் வேலை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது, அவர் சூதாட்ட விடுதிக்குச் சென்றதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பாயிண்ட்-டு-பாயிண்ட் போக்குவரத்து சேவைகளில் பயணிகளுக்கு அதிக திருப்தி..!

தற்போது வேலை அனுமதி ரத்து செய்யப்பட்ட மூன்று தொழிலாளர்களும் MOM-ன் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை. இதில் LOA கட்டாய விடுப்பு நேரத்தில் தங்கள் தொழிலாளர்கள் தொடர்பு கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யத் தவறியதற்காக இரு முதலாளிகளின் வேலை அனுமதி சலுகைகளையும் அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது.

இதுவரை கட்டாய விடுப்பு விதிமுறைகளை மீறியதற்காக 14 ஊழியர்கள் மற்றும் 15 முதலாளிகள் மீது MOM நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், கட்டாய விடுப்பு குறித்த விதிகளைப் பின்பற்றுவது ஊழியர்கள், முதலாளிகள் ஆகியோரின் கடமை என்பதையும் MOM வலியுறுத்தியுள்ளது.