2.2 மில்லியன் இலவச முகக்கவசங்களை விநியோகம் செய்த டெமாசெக் அறக்கட்டளை!

Photo: Temasek Foundation

சிங்கப்பூரில் உள்ள டெமாசெக் அறக்கட்டளை நிறுவனம், ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தக்கூடிய MaskPure AIR⁺ என்ற முகக்கவசங்களை சிங்கப்பூரில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் தொடர்ச்சியாக இலவசமாக வழங்கி வருகிறது.

பள்ளி சிறுமியை மற்ற 2 சிறுமிகள் தாக்கும் வீடியோ வைரல்… போலீசில் புகார்

இதற்காக, சிங்கப்பூரில் அனைத்து சமூக மன்றங்கள் (Community Centres), பேருந்து முனையங்கள் (Bus Interchanges), Plaza Singapura உள்ளிட்ட மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இடங்களில் முகக்கவசங்களை விநியோகிக்கும் இயந்திரங்களை (Vending Machine) டெமாசெக் அறக்கட்டளை நிறுவனம் வைத்துள்ளது.

சிங்கப்பூர் குடிமக்கள் அரசால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொண்டு, முகக்கவசங்கள் வழங்கும் இயந்திரத்தில், அதனை பதிவுச் செய்து, முகக்கவசங்களைப் பெற்றுக் கொள்ளலாம். தீவு முழுவதும் சுமார் 1,000- க்கும் மேற்பட்ட முகக்கவசங்கள் விநியோகிக்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல்… கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள சிங்கப்பூர்!

இந்த நிலையில், நேற்று (18/01/2022) மதியம் நிலவரப்படி, சுமார் 2.2 மில்லியன் முகக்கவசங்களை விநியோகம் செய்துள்ளதாகக் கூறிய டெமாசெக் அறக்கட்டளை நிறுவனம் (Temasek Foundation), இலவச முகக்கவசங்களைப் பெற்றுக் கொள்ள சுமார் 12,000- க்கும் மேற்பட்டோர் முன்கூட்டியே விண்ணப்பித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்தே, டெமாசெக் அறக்கட்டளை நிறுவனம், சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் பல்ஸ் ஆக்சி மீட்டர் மற்றும் வாய் கொப்பளிப்பு திரவம், முகக்கவசங்களை இலவசமாக வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.