சிங்கப்பூரில் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியதாக இருவர் கைது – ஓட்டுநர் உரிமம் ரத்து..!

2 men arrested for dangerous driving after accident involving car, van along CTE
2 men arrested for dangerous driving after accident involving car, van along CTE (Photo: Facebook / ROADS.sg)

சிங்கப்பூர் மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் (CTE) ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து, இரண்டு பேர் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் விளைவாக இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை (ஜூலை 31) செய்தி வெளியீட்டில் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து 5ஆம் கட்டமாக தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை..!

இந்த விபத்து குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த ஒரு நாளுக்குப் பின்னர், 30 மற்றும் 41 வயதுடைய ஆடவர் இருவர் போக்குவரத்து காவலரால் கைது செய்யப்பட்டனர்.

சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் (CTE), வேன் மற்றும் கார் சம்பந்தப்பட்ட இந்த விபத்து குறித்து கடந்த புதன்கிழமை இரவு 9 மணியளவில் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இந்த விபத்தில், ஒரு பெண் நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தத்துடன் சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு பின்னால் உள்ள சாலையிலும் ரத்தம் காணப்பட்டது.

வேன் ஓட்டுநரும் அவரது பயணிகளும் சுயநினைவுடன் கூ டெக் புவாட் (Khoo Teck Puat) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சம்பந்தப்பட்ட கார் விபத்துக்கு முன்னர் மற்றொரு காருக்குப் பக்கத்தில் ஆபத்தான முறையில் சென்று கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று காவல்துறை தெரிவித்தனர்.

இரண்டு கார் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன மற்றும் அவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஊட்டச் சத்து மிக்க அரிசி – தினசரி 12,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கல்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg