சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் ரசாயன தொழிற்சாலை தீ விபத்தில் இந்திய ஊழியர் உட்பட இருவர் பலி..!

ஜூராங் தீவில் உள்ள ஒரு ரசாயன ஆலையில் கடந்த பிப்ரவரி 7 அன்று ஏற்பட்ட விபத்தில் தீக்காயங்கள் காரணமாக இருவர் உயிரிழந்தனர், அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர் மற்றும் மற்றொருவர் இந்திய நாட்டைச் சேர்ந்த தொழிலாளி என்று தகவல் வெளியாகியுள்ளது.

21 சக்ரா அவென்யூவில் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டபோது, ஹைட்ரோகார்பன் குழாய் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் குழுவில் இவர்கள் இருவரும் அடங்குவர்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ் (Covid-19); பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் முழு செலவை ஏற்கும் சிங்கப்பூர் அரசு..!

இதனை தொடர்ந்து, 38 வயதான சிங்கப்பூர் மற்றும் 29 வயதான இந்தியர் ஆகியோர் இங் டெங் ஃபாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்களின் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் அவர்கள் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அறுவை சிகிச்சைக்கு மேற்கொள்ளப்பட்ட பிறகு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதில் கப்பலின் மேல் தளத்தில் தீ ஏற்பட்டதாகவும், SCDF வருவதற்கு முன்பு நிறுவனத்தின் அவசரகால மீட்புக் குழு தீயை அணைத்ததாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; சிங்கப்பூரில் புதிய 24 மணிநேரப் பயணச் சேவையை வழங்கும் கிராப்..!

இந்த விபத்தில் உயிரிழந்த சிங்கப்பூரர், செலானீஸ் சிங்கப்பூர் (Celanese Singapore) நிறுவனத்தில் பணிபுரிந்ததாகவும், மற்றொரு இந்தியர் டெக்செகோ எஞ்சினியரிங் (Texeco Engineering) நிறுவனத்தில் பணிபுரிந்ததாகவும் மனிதவள அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மனிதவள அமைச்சகம் விசாரணை மேற்கொண்டுள்ளது, மேலும் சுத்திகரிப்பு பணிகளை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Related posts