“சர்க்யூட் பிரேக்கர்” எனும் அதிரடி நடவடிக்கை தொடங்கியதிலிருந்து குடும்ப வன்முறை அதிகரிப்பு – SPF..!

family-violence wife alarm
photo: Try Sutrisno Foo

சிங்கப்பூரில் கடந்த ஏப்ரல் “சர்க்யூட் பிரேக்கர்” எனும் அதிரடி நடவடிக்கை தொடங்கியதிலிருந்து குடும்ப வன்முறை தொடர்பான காவல்துறை புகார்கள் 22 சதவீதம் அதிகரித்துள்ளன என்று சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) வியாழக்கிழமை (மே 14) தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 7 முதல் மே 6 வரை, குடும்ப வன்முறை தொடர்புடைய குற்றங்களுக்காக 476 புகார்கள் பதிவு செய்யப்பட்டன, அதாவது துன்புறுத்தல், தாக்குதல், மிரட்டல் போன்றவை அதில் அடங்கும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 6 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் – சுகாதார அமைச்சகம்..!

இதுபோன்ற வழக்குகள் குறித்து தீவிரமான கண்காணிப்பதாகவும், குடும்ப உறுப்பினர்களை துன்புறுத்துபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம் என்றும் SPF தெரிவித்துள்ளது.

மேலும், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவை அதிகரிக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று SPF செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

தற்போது, ​​குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், சமூக உதவி வேண்டினால் அருகிலுள்ள குடும்ப சேவை மையம் அல்லது குடும்ப வன்முறை சிறப்பு மையத்திற்கு காவல்துறை பரிந்துரைக்கிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஒரே நாளில் ஆக அதிகமானோர் COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்..!