சிங்கப்பூரில் சுமார் $27,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; வெளிநாட்டு கார் ஓட்டுநர் கைது..!

cannabis seized from Malaysian-registered car at Tuas
$27,000 worth of cannabis seized from Malaysian-registered car at Tuas (PHOTO: CENTRAL NARCOTICS BUREAU)

சிங்கப்பூர்: துவாஸ் சோதனைச் சாவடியில், மலேசிய நாட்டுப் பதிவு பெற்ற காரில் சுமார் $27,000 மதிப்புள்ள ஆறு பொட்டலங்களில் அடங்கிய கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் (மார்ச் 2) செய்தனர்.

இந்த சம்பவத்தில், 24 வயதான மலேசிய நாட்டைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : COVID-19 பற்றி கூறி மாணவர் மீது இனவெறி தாக்கு; சிங்கப்பூர் தூதரகம், UK அதிகாரிகளுடன் தொடர்பு…!

மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB) அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என்று CNB மற்றும் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட அந்த கஞ்சா பொட்டலங்களின் எடை சுமார் 2.4 கிலோகிராம் இருக்கும் என்றும் Straits Times குறிப்பிட்டுள்ளது.

இது சுமார் 340 போதை புழங்கிகளுக்கு ஒரு வாரத்திற்கு பயன்படுத்த போதுமானது என்றும் குறிப்பிட்டுள்ளது.

கூடுதலாக வாகனங்கள், பயணிகள் மற்றும் சரக்குகள் குறித்து தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்வதாகவும் ICA கூறியுள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; பயணக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தும் சிங்கப்பூர்..!

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil