COVID -19; சிங்கப்பூரில் ஆயுதப்படை வீரர் உட்பட மேலும் மூவருக்கு வைரஸ் தொற்று உறுதி..!

சிங்கப்பூரில் மூன்று புதிய COVID-19 நபர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) தெரிவித்துள்ளது.

இந்த புதிய மூன்று சம்பவத்தில் ஒன்று சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர் (SAF) , மற்றொன்று கிரேஸ் அசெம்ப்ளி ஆஃப் காட் தேவாலயத்துடன் தொடர்பு உள்ளது, மூன்றாம் நபர் ஏற்கெனவே கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19; நாம் தயாராக இருக்கவேண்டும் – சிங்கப்பூர் அரசு..!

அனைத்து புதிய நபர்களும் சீனாவுக்கு சமீபத்தில் செல்லவில்லை, சிங்கப்பூரில் கோவிட் -19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 75ஆக உயர்ந்துள்ளது.

73 வது நபர்

43 வயதான சிங்கப்பூர் ஆயுதப் படைவீரர். அவர் தெங்கா விமான தளத்தின் 613 கட்டடத்தில் பணிபுரிகிறார்.

ஆனால் அவர் கடந்த பிப்ரவரி 6 முதல் பணியில் இல்லை என்றும் பாதுகாப்பு அமைச்சகம் (MINDEF) தெரிவித்துள்ளது.

74 வது நபர்

29 வயதான சிங்கப்பூர் ஆடவர், இவர் கிரேஸ் அசெம்பிளி ஆஃப் காட் தேவாலயத்துடன் தொடர்புடையவர். பிப்ரவரி 12 அன்று அறிகுறிகள் தென்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அவர் அதே நாளில் அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார், அதை தொடர்ந்து மீண்டும் பிப்ரவரி 15 அன்று அவர் அனுமதிக்கப்பட்டார், பிறகு அதே பிற்பகலில் அவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

தேவாலயத்துடன் தற்போது வரை மொத்தம் 18 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

75 வது நபர்

71 வயதான சிங்கப்பூர் பெண், இவருக்கு பிப்ரவரி 16 காலையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது, தற்போது அவர் என்.சி.ஐ.டி. அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 41வது நபரின் குடும்ப உறுப்பினர் ஆவார், மேலும் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்படுவதற்கு முன்பு, பிப்ரவரி 7 ஆம் தேதியிலிருந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸை மீறி தன்னுடைய குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுத்த தாய்..!

கூடுதல் விவரம்

மேலும் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனுடன் வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 19ஆக உள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் 56 பேரில், ஐந்து பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.